Tuesday, March 16, 2010

பல் வலி

இப்ப... உங்க வீட்டுல அம்மாவோ, அப்பாவோ, மகனோ, மகளோ, தம்பியோ, அண்ணனோ அல்லது தங்கச்சியோ பல் வலின்னு பல் மருத்துவர பார்த்து விட்டு வந்தால் நீங்க என்ன பண்ணுவிங்க? அட மொதல்ல என்ன கேட்பீங்க ...என்ன ஆச்சு ? இப்ப எப்படி இருக்கு? என்ன சொன்னாங்க ? ஒரு பரிவான விசாரிப்பு ...

எதனால் இந்த விசாரிப்பு? வலியோட இருக்கறவங்களுக்கும் இந்த மாதிரி விசாரிப்புக்கள் ஒரு இதமான உணர்வை கொடுக்கும் என்பதற்காகத்தானே .... ஒரு பரிவு , பாசம் , அன்பு , Care... இவற்றால்தானே...

என்னடா Blog ல முதல் பதிவே இப்படி ஆரம்பிக்கிறானே என்று நினைக்கலாம் . பல வலிகளின் சுருக்கமே பல் வலியானது.

அன்பு, பாசம், கருணை, ஆணவம், குரூரம்... இப்படி எல்லாமுமாய் இருக்கின்ற மனித மனதின் வழியே ஒரு பயணம்...

அனுபவமும் அலசலும் ...

No comments:

Post a Comment