Wednesday, March 17, 2010

1000 வருஷமா?

இப்பதான் தம்பி ஒரு பத்து நிமிஷம் முன்னால புறப்பட்டு போச்சு. ஆனா இப்படி ஒரேயடியா போகும்னு யார் நினைச்சாங்க ...Accident - ல் இறந்த ஒருவரை பற்றி காமாட்சி பாட்டி என்னிடம் சொல்லியது. அவருக்குள் எத்தனை எத்தனை கனவுகளோ ...

அண்ணே எனக்கு குழந்தை பிறந்து விட்டது என்று ஒரு மாதம் முன்பு சந்தோசமாய் என்னிடம் சொல்லியவன் முகத்தில் இன்று ஒரு கலக்கம், சோகம் ...என்னடா என்ன ஆச்சு? பாப்பாவுக்கு heart - ல ஏதோ problem னே. ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார்னே. என்ன சொல்ல?

இப்படி எத்தனை எத்தனையோ இழப்புகள், சோகங்கள் , அதிர்ச்சிகள் இந்த வாழ்வின் ஊடே.இப்படி சோகத்தின் எல்லைக்கு போகும் நிலைமை ஒவ்வொருவருக்கும் ஒரு நேரத்தில் வர வாய்ப்பு உண்டு.நம் கையில் இல்லாத விஷயங்களுக்காக நாம் ஒன்றும் பண்ண முடியாது.

சந்தோஷம் எங்கே? தேட வேண்டாம். இருப்பதே சந்தோசம்தான். இன்றுதான் வாழ்க்கையின் கடைசி நாள் அல்லது இன்றோடு உலகம் அழிய போகின்றது என்றால் எல்லோரும்  எப்படி வாழ்வோம்? கோபம், வெறுப்பு இவைகளை வைத்து கொண்டா அந்த நாளை வாழ்வோம்? கண்டிப்பாக அந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.

நாம் எல்லோரும் 1000 வருஷம் வாழ போவதாக நினைத்து கொண்டு ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் அற்புதமான நாளாக வைத்து கொள்வது நம் கையில் இருக்கின்றது. உடலும், மனதும் ஆரோக்யமாக இருக்கும் வரையில் மட்டுமே சந்தோசம். இரண்டில் ஒன்று பாதித்தாலும் பாதிப்பே.

இப்படி என்று திரும்பி பார்ப்பதற்குள் எல்லாமே முடிந்து விடும். 1000 வருஷங்கள் வாழப்போவது இல்லை. யோசியுங்கள்...

No comments:

Post a Comment