என் ...
ஒளியும் நீ
ஒலியும் நீ
உளியும் நீ
வலியும் நீ
வழியும் நீ
மோதலும் நீ
காதலும் நீ
வாழ்வும் நீ
சாவும் நீ
சாந்தி நீ
என் சாந்தினி...
---வேந்து
Monday, April 26, 2010
Wednesday, March 17, 2010
1000 வருஷமா?
இப்பதான் தம்பி ஒரு பத்து நிமிஷம் முன்னால புறப்பட்டு போச்சு. ஆனா இப்படி ஒரேயடியா போகும்னு யார் நினைச்சாங்க ...Accident - ல் இறந்த ஒருவரை பற்றி காமாட்சி பாட்டி என்னிடம் சொல்லியது. அவருக்குள் எத்தனை எத்தனை கனவுகளோ ...
அண்ணே எனக்கு குழந்தை பிறந்து விட்டது என்று ஒரு மாதம் முன்பு சந்தோசமாய் என்னிடம் சொல்லியவன் முகத்தில் இன்று ஒரு கலக்கம், சோகம் ...என்னடா என்ன ஆச்சு? பாப்பாவுக்கு heart - ல ஏதோ problem னே. ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார்னே. என்ன சொல்ல?
இப்படி எத்தனை எத்தனையோ இழப்புகள், சோகங்கள் , அதிர்ச்சிகள் இந்த வாழ்வின் ஊடே.இப்படி சோகத்தின் எல்லைக்கு போகும் நிலைமை ஒவ்வொருவருக்கும் ஒரு நேரத்தில் வர வாய்ப்பு உண்டு.நம் கையில் இல்லாத விஷயங்களுக்காக நாம் ஒன்றும் பண்ண முடியாது.
சந்தோஷம் எங்கே? தேட வேண்டாம். இருப்பதே சந்தோசம்தான். இன்றுதான் வாழ்க்கையின் கடைசி நாள் அல்லது இன்றோடு உலகம் அழிய போகின்றது என்றால் எல்லோரும் எப்படி வாழ்வோம்? கோபம், வெறுப்பு இவைகளை வைத்து கொண்டா அந்த நாளை வாழ்வோம்? கண்டிப்பாக அந்த நாள் ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.
நாம் எல்லோரும் 1000 வருஷம் வாழ போவதாக நினைத்து கொண்டு ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் அற்புதமான நாளாக வைத்து கொள்வது நம் கையில் இருக்கின்றது. உடலும், மனதும் ஆரோக்யமாக இருக்கும் வரையில் மட்டுமே சந்தோசம். இரண்டில் ஒன்று பாதித்தாலும் பாதிப்பே.
இப்படி என்று திரும்பி பார்ப்பதற்குள் எல்லாமே முடிந்து விடும். 1000 வருஷங்கள் வாழப்போவது இல்லை. யோசியுங்கள்...

Tuesday, March 16, 2010
பல் வலி
இப்ப... உங்க வீட்டுல அம்மாவோ, அப்பாவோ, மகனோ, மகளோ, தம்பியோ, அண்ணனோ அல்லது தங்கச்சியோ பல் வலின்னு பல் மருத்துவர பார்த்து விட்டு வந்தால் நீங்க என்ன பண்ணுவிங்க? அட மொதல்ல என்ன கேட்பீங்க ...என்ன ஆச்சு ? இப்ப எப்படி இருக்கு? என்ன சொன்னாங்க ? ஒரு பரிவான விசாரிப்பு ...
எதனால் இந்த விசாரிப்பு? வலியோட இருக்கறவங்களுக்கும் இந்த மாதிரி விசாரிப்புக்கள் ஒரு இதமான உணர்வை கொடுக்கும் என்பதற்காகத்தானே .... ஒரு பரிவு , பாசம் , அன்பு , Care... இவற்றால்தானே...
என்னடா Blog ல முதல் பதிவே இப்படி ஆரம்பிக்கிறானே என்று நினைக்கலாம் . பல வலிகளின் சுருக்கமே பல் வலியானது.
அன்பு, பாசம், கருணை, ஆணவம், குரூரம்... இப்படி எல்லாமுமாய் இருக்கின்ற மனித மனதின் வழியே ஒரு பயணம்...
அனுபவமும் அலசலும் ...

Subscribe to:
Posts (Atom)